மாநில உரிமையைப் பறிக்கும் 'கருப்புச் சட்டத்தை' ஏற்கவே மாட்டோம்!
தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்காதே! சதி மசோதாவைத் திரும்பப் பெறு! "வாய்மொழி உறுதிமொழி வேண்டாம்! - தொகுதி மறுசீரமைப்பு மசோதாவிற்கு எதிராகத் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு."
"மத்திய பாஜக அரசே, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறு! நாடாளுமன்றத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் வழங்கிய வாய்மொழி உறுதிமொழி என்பது வெறும் கண்கட்டு வித்தை. நீங்கள் தாக்கல் செய்துள்ள மசோதா, எதிர்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வழிவகை செய்யும் ஒரு மாபெரும் சதி.
இந்த கருப்புச் சட்டம் மாநிலங்களின் உரிமைகளைச் சிதைத்து, கூட்டாட்சித் தத்துவத்தை அழிக்கிறது. இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டது போன்ற அரசியல் சாசனப் பாதுகாப்பை (Constitutional Freeze) நாங்கள் கோருகிறோம். எண்களின் பலத்தைக் காட்டி ஜனநாயகத்தை நசுக்க முற்பட்டால், அதற்குரிய அரசியல் விலையைத் தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்!"

0 Comments
No comments yet. Be the first to comment.