TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்!

Share This Article:

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்!

டெட்ராய்ட்:

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரில் உள்ள ஒரு இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச்சூட்டில் முடிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெட்ராய்ட் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள அந்த இடத்தில் காலை சுமார் 7.21 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 3 ஆண்கள் உயிரிழந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் மேலும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் தனியார் வாகனங்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்தவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Content image

முதற்கட்ட விசாரணையில், கேளிக்கை விடுதிக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தகராறு பின்னர் துப்பாக்கிச்சூட்டாக மாறியதாக டெட்ராய்ட் போலீஸ் தலைவர் டாட் பெட்டிசன் தெரிவித்துள்ளார். தகராறில் ஈடுபட்டவர்கள் பிரச்சினையை துப்பாக்கிச்சூடு மூலம் தீர்க்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இடம் ஏற்கனவே போலீசாரின் கவனத்தில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் அந்த முகவரிக்கு தொடர்பாக போலீசாருக்கு 7 முறை அழைப்புகள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த அழைப்புகள் அனைத்தும் துப்பாக்கிச்சூடு தொடர்பானவை அல்ல என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த சில தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக கூறப்பட்டாலும், விசாரணை பாதிக்கக்கூடும் என்பதால் அதன் முழு விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions