இந்தியா உட்பட 20 நாடுகளின் குறிப்பிட்ட மருந்துகளுக்கு 100% வரி விலக்கு; அமெரிக்கா அறிவிப்பு!
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சிறப்பு மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100 சதவீத வரியிலிருந்து விலக்கு அளித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரிய நோய்களுக்கான மருந்துகள், கருவுறுதல் சிகிச்சை மருந்துகள், செல் மற்றும் ஜீன் தெரபி உள்ளிட்ட குறிப்பிட்ட மருந்துப் பிரிவுகளுக்கு இந்த 0% வரி சலுகை வழங்கப்படுகிறது.
வாஷிங்டன்:
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சிறப்பு வகை மருந்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மருந்து மூலப்பொருட்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதலை அமெரிக்க வர்த்தகத் துறையின் Bureau of Industry and Security வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய விதிகளின்படி, தகுதி பெறும் குறிப்பிட்ட மருந்துகளுக்கு 0% ad valorem tariff எனப்படும் வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் 0% வரி சலுகை
இந்த சலுகைக்கு தகுதி பெற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியா தவிர வங்கதேசம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மொத்தம் 20 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பு இந்திய மருந்து உற்பத்தியாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க சந்தையை இலக்காகக் கொண்டு சிறப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, தகுதி பெறும் தயாரிப்புகளில் கூடுதல் வரிச்சுமை ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
எந்த மருந்துகளுக்கு விலக்கு?
அமெரிக்காவின் அறிவிப்பின்படி, இந்த வரி விலக்கு அனைத்து மருந்துகளுக்கும் பொருந்தாது. குறிப்பிட்ட specialty pharmaceutical products மட்டுமே இந்த சலுகைக்கு தகுதி பெறுகின்றன.
அதில்:
- அரிய நோய்களுக்கான மருந்துகள்
- நியூக்ளியர் மெடிசின்
- பிளாஸ்மா மூலம் தயாரிக்கப்படும் சிகிச்சைகள்
- கருவுறுதல் சிகிச்சைக்கான மருந்துகள்
- செல் தெரபி
- ஜீன் தெரபி
- Antibody-Drug Conjugates
- சில மருத்துவ அவசரத் தேவைகளுக்கான மருந்துகள்
- கால்நடை மருத்துவத்துக்கான குறிப்பிட்ட மருந்துகள்
ஆகியவை இடம்பெறுகின்றன. இந்த தயாரிப்புகளுடன் தொடர்புடைய சில முக்கிய மருந்து மூலப்பொருட்களுக்கும் விதிமுறைகளின் கீழ் 0% வரி சலுகை கிடைக்கிறது.
ஜெனரிக் மருந்துகளுக்கு என்ன நிலை?
முக்கியமாக, அமெரிக்க வர்த்தகத் துறையின் அறிவிப்பின்படி ஜெனரிக் மருந்துகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் Section 232 மருந்து வரியின் கீழ் வராது. எனவே, இந்த 100% வரி நடவடிக்கை குறித்து பேசும்போது, அனைத்து இந்திய மருந்து ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும் என்று கருத முடியாது.
வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்பு
அமெரிக்க வர்த்தகத் துறையின் அறிவிப்பில், இந்த 0% வரி சலுகைக்கு தகுதி பெறும் நாடுகள் தற்போதைய அல்லது எதிர்கால வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் கொண்டுள்ள நாடுகளாகவோ, அல்லது அமெரிக்காவின் அவசர சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளாகவோ குறிப்பிடப்பட்டுள்ளன.

0 Comments
No comments yet. Be the first to comment.