TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

மதுரையில் பயங்கரம்: சினிமா பாணியில் பைக்கைச் சேஸிங் செய்து இளைஞர் வெட்டிக்கொலை!

Share This Article:

மதுரை மாவட்டத்தில் "விராதனூர்" பகுதியில் பைக்கில் சென்ற இளைஞர்களை வழிமறித்த மர்ம நபர்கள், ஒருவர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலைக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் பயங்கரம்: சினிமா பாணியில் பைக்கைச் சேஸிங் செய்து இளைஞர் வெட்டிக்கொலை!

மதுரை,

மதுரை மாவட்டம் "விராதனூர்" பகுதியில் உள்ள சக்திநகர் அருகே, நேற்று நள்ளிரவு பைக்கில் சென்றுகொண்டிருந்த இரு இளைஞர்களை காரில் வந்த மர்ம கும்பல் துரத்திச் சென்று, காரால் மோதி கீழே தள்ளி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இந்த கொடூரத் தாக்குதலில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற தினேஷ் படுகாயமடைந்தார்.

பைக்கில் சென்ற இளைஞர்களைத் துரத்திய கும்பல்

தினேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்தியுள்ளது. பின்னர், வேகமாகச் சென்ற பைக் மீது காரை மோதியதில் இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளனர்.

Content image

இளைஞர் கொடூரக்கொலை

இதையடுத்து, காரிலிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல், கீழே விழுந்திருந்த தினேஷ் மற்றும் சந்தோஷ்குமாரை சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தினேஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார்.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்த தினேஷை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions