TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

முதல்வர் விஜய் - ஆளுநர் சந்திப்பு: தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?

Share This Article:

தமிழக முதல்வர் விஜய் ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்கிறார். எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்குகள், டிடிவி தினகரன் புகார் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிருப்திக்கு இடையே நிகழும் இந்த சந்திப்பின் பின்னணி குறித்த விரிவான பார்வை.

முதல்வர் விஜய் - ஆளுநர் சந்திப்பு: தமிழக அரசியலில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டோட முதலமைச்சர் விஜய் இன்னைக்கு நம்ம புது முழுநேர ஆளுநர் அர்லேகரை சந்திக்கிறார். இப்போ இருக்குற அரசியல் பரபரப்புல இந்த சந்திப்பு ரொம்ப முக்கியமானதா பார்க்கப்படுது.கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சென்னை மெட்ரோ நிகழ்ச்சியில பிரதமர் மோடியை விஜய் சந்திச்சாரு. அதற்கு முன்னாடி நாள் ராகுல் காந்தியையும் சந்திச்சு பேசுனாரு. இப்போ ஆளுநரை சந்திக்கிறது அரசியல் வட்டாரத்துல பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கு.

விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இப்போ சில சட்டச் சிக்கல்கள் இருக்கு. அதிமுகவுல இருந்து 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா பண்ணிட்டு தவெக-ல சேர்ந்தாங்க. அவங்க ராஜினாமாவை சபாநாயகர் ஏத்துக்கிட்டதை உயிர்நீதிமன்றமும் சரினு சொல்லிருச்சு. ஆனா, இன்னும் சில எம்.எல்.ஏ-க்கள் மேல தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க கோர்ட் சொல்லியிருக்கிறது பெரிய சிக்கல்தான். இது சம்பந்தமா டிடிவி தினகரன் கொடுத்த புகாரும் ஆளுநர் கிட்ட தான் இருக்கு .

Content image

விஜய் அரசு மெஜாரிட்டியை தக்கவைக்க கூட்டணி கட்சிகளைத்தான் நம்பியிருக்கு. ஆனா, ஆதரவு கொடுத்த இடதுசாரி கட்சிகள் அரசை தொடர்ந்து விமர்சனம் பண்றாங்க. 'ஆதரவை வாபஸ் வாங்கிடுவோம்'னு சொல்றதும் அரசுக்கு கூடுதல் நெருக்கடிபியா இருக்கு . இதுபோக பாமக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளோட அடுத்தடுத்த நகர்வுகளும் உன்னிப்பா கவனிக்கப்படுது.பாமக கூட்டணிக்குள்ள வந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் னு விசிக தலைவர்கள் பேசிட்டு இருக்காங்க . இன்னொரு பக்கம் காங்கிரஸ் சார்பா தேசிய அரசியலில் நடக்குற போராட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் பெருசா பேசாதத்தையும் காங்கிரஸ் தலைவர்கள் விரும்பல .

இந்த மாதிரி ஒரு பரபரப்பான நேரத்துல, தமிழ்நாட்டுக்குன்னு ஒரு முழுநேர ஆளுநர் வந்திருக்கிறது ரொம்ப முக்கியம். நிலுவையில இருக்குற புகார்கள் விஷயத்துல ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போறாருனு எல்லாரும் பாத்துட்டு இருக்காங்க. ஆனாலும், எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் பண்றதுல சபாநாயகருக்குத்தான் முழு அதிகாரம் இருக்கு, ஆளுநருக்கு இதுல சில கட்டுப்பாடுகள் இருக்கு.

மொத்தத்துல கூட்டணிக்குள்ள இருக்கிற குழப்பம், எம்.எல்.ஏ-க்கள் பிரச்சனைனு விஜய் அரசு நிறைய சவால்களை சந்திச்சிட்டு இருக்கு. இந்த நிலைமையில ஆளுநர்கூட நடக்குற சந்திப்புக்கு அப்புறம், தமிழக அரசியல்ல அடுத்தடுத்து என்ன நடக்கப் போகுதுங்கிற எதிர்பார்ப்பு எகிறியிருக்கு.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions