TBC News

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செங்கோட்டையன்": ஆளுநரிடம் அதிமுக சார்பில் பரபரப்பு புகார் மனு!

Share This Article:

அதிமுகவில் இருந்து 15 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவார்கள் எனத் தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

"குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செங்கோட்டையன்": ஆளுநரிடம் அதிமுக சார்பில் பரபரப்பு புகார் மனு!


"குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செங்கோட்டையன்": ஆளுநரிடம் அதிமுக சார்பில் பரபரப்பு புகார் மனு!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க குதிரை பேரத்தில் ஈடுபடும் வகையில் கருத்து தெரிவித்ததாக, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "அதிமுகவில் இருந்து மிக விரைவில் 15 எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்து வெளியேறி வருவார்கள்" என்று தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.




Content image

ஆளுநரிடம் அதிமுக புகார்:

அமைச்சரின் இந்த பேச்சைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிமுகவின் சட்டமன்றக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிமுக தலைவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

மனுவை அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி:

"அதிமுகவிலிருந்து 15 எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள் என்று ஒரு பொறுப்புமிக்க அமைச்சர் கூறுவது, வெளிப்படையாகக் குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செயலாகும். ஜனநாயக மரபுகளை மீறி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயலும் இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதமானவை. குதிரை பேரத்தை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் மீது உடனடியாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

ஏற்கெனவே கட்சி தாவல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் விவகாரங்கள் தொடர்பாகத் தமிழக அரசியலில் பெரும் விவாதங்கள் நிலவி வரும் சூழலில், அதிமுக அளித்துள்ள இந்தப் புகார் மனு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions