TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பாத்திரம் கழுவிய கைகள் முதல் பத்மஸ்ரீ விருது வரை! மக்களின் மனதை வென்ற செஃப் தாமுவின் கண்ணீர் கலந்த கதை!

Share This Article:

பாத்திரம் கழுவும் தொழிலாளியாக சமையலறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, தன் கடின உழைப்பால் கின்னஸ் சாதனை மற்றும் உயரிய 'பத்மஸ்ரீ' விருது வரை உயர்ந்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் நெகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் மறைவு குறித்த செய்தி

பாத்திரம் கழுவிய கைகள் முதல்  பத்மஸ்ரீ விருது வரை! மக்களின் மனதை வென்ற செஃப் தாமுவின் கண்ணீர் கலந்த கதை!

ஒரு காலத்தில் எச்சில் தட்டுகளைக் கழுவி, சுடுநீரில் வெந்து சிவந்த அதே கைகள்தான்... பிற்காலத்தில் கின்னஸ் சாதனை படைத்து 'பத்மஸ்ரீ' விருதையும் ஏந்தியது. கால் மூட்டுகள் தேய்ந்து, வலியால் சக்கர நாற்காலியில் முடங்கியபோதும், மற்றவர்களைச் சிரிக்க வைப்பதை அவர் ஒருபோதும் நிறுத்தவே இல்லை .இந்தியாவின் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரைக்கும் எல்லாராலும் கொண்டாடப்பட்ட அந்த மனிதர் வேற யாருமில்லை… நம்ம செஃப் தாமு!ஆனா, இந்தச் சிரிப்புக்குப் பின்னாடி எத்தனை கஷ்டங்கள் இருந்திருக்கும்னு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்துல பிறந்த கே. தாமோதரன், வாழ்க்கையில முன்னேறணும்னு நினைச்சாரு. சமையலறையில அவரோட பயணம் ஆரம்பிச்சது பெரிய செஃப் ஆக இல்ல… அடிப்படை வேலைகளைச் செய்ற ஒரு தொழிலாளியா! பாத்திரம் கழுவுறது, சமையலறையைச் சுத்தம் செய்றது என ஆரம்பிச்ச அந்தப் பயணத்துல, மற்றவர்கள் சமைக்கிறதைப் பார்த்து ஒவ்வொரு நுணுக்கமா கத்துக்கிட்டாரு. அவருக்குக் கிடைச்சது வெறும் வேலை மட்டும் இல்ல… ஒரு நாள் நாமும் பெரிய சமையல் கலைஞரா வரணும்ங்கிற கனவுக்கான அனுபவம்!


Content image

அந்தக் கனவை அவர் அப்படியே விட்டுடல. கடின உழைப்பு, விடாமுயற்சி, கல்வின்னு ஒவ்வொரு படியா ஏறி, சென்னைப் பல்கலைக்கழகத்துல ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். ஒரு காலத்துல சமையலறையின் அடிப்படை வேலைகளைச் செய்தவர், இன்னைக்கு டாக்டர் தாமோதரன்!

2010-ல் தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள் சமைத்து, 617 வகையான உணவுகளைத் தயாரிச்சு கின்னஸ் உலகச் சாதனையும் படைச்சார். ஆனா, இந்தச் சாதனைகளெல்லாம் அவரோட வாழ்க்கையில ஒரு பகுதி மட்டும்தான்!ஏன்னா, தாமு சாரை மக்களோட மனசுக்கு இவ்வளவு நெருக்கமாக்கினது அவரோட சமையல் திறமை மட்டுமில்ல… அவருக்குள்ள இருந்த அந்த மனிதநேயம்தான்!


Content image

குறிப்பா, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி அவரை ஒவ்வொரு வீட்டுக்கும் நெருக்கமான ஒருவரா மாத்துச்சு. செஃப் வெங்கடேஷ் பட் உடன் இணைந்து அவர் செய்த சேட்டைகள், போட்டியாளர்களிடம் காட்டிய அன்பு, தவறு செய்றவங்களைக்கூடச் சிரிச்சுக்கிட்டே வழிநடத்தின விதம். இதெல்லாம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்குச்சு. அந்த நிகழ்ச்சியில நாம பார்த்தது ஒரு செஃப்பை மட்டும் இல்ல… திட்ட வேண்டிய இடத்துலகூட அன்பைக் காட்டுற ஒரு நல்ல மனிதரை! சமையல் தெரியாதவங்களையும் ஊக்கப்படுத்தி, சிரமப்படுறவங்களையும் அரவணைச்சு, சிரிப்பையே ஒரு மருந்தா கொடுத்த மனிதர் அவர்!சமையல் கலைக்கு அவர் செஞ்ச மாபெரும் தொண்டுக்காக இந்திய அரசு அவருக்கு உயரிய "பத்மஸ்ரீ" விருது கொடுத்து அழகு பார்த்தது. ஆனா, இந்த அசுர வெற்றிக்கு அவர் கொடுத்த விலை ரொம்ப பெருசு. தினமும் 15 முதல் 18 மணி நேரம் நின்றபடியே உழைத்ததால், கால் மூட்டுகள் தேய்ந்து கடுமையான வலியால் துடித்தார். இடுப்பு எலும்பு முறிந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபோதும்... அவர் முகத்தில் இருந்த அந்த புன்னகை மட்டும் மறையவே இல்லை.


Content image

ஆனா, வாழ்க்கை முழுக்க மற்றவர்களைச் சிரிக்க வச்ச அந்த மனிதரின் பயணம், உடல்நலப் பாதிப்புகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தது. இன்று அவர் நம்மோட இல்லங்கிற செய்தி, அவரைத் தொலைக்காட்சியில பார்த்து ரசிச்ச ஒவ்வொருத்தருக்குமே ஒரு நெருக்கமான உறவை இழந்த உணர்வைக் கொடுக்குது. பாத்திரம் கழுவிய கைகளால் கின்னஸ் சாதனை படைச்சு, பத்மஸ்ரீ விருதைத் தொட்டு, கோடிக்கணக்கான மக்களின் இதயங்கள்ல இடம்பிடிச்ச செஃப் தாமு… நீங்க எங்களுக்கு ஒரு சமையல் கலைஞர் மட்டுமில்ல, வாழ்க்கையில எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் மனிதநேயத்தை மறக்கக் கூடாதுன்னு கத்துக்கொடுத்த ஒரு மனிதர்!


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions