சர்வதேச கார் பந்தயத்தில் சாதித்த அஜித்குமார்! பெல்ஜியத்தில் பறந்த இந்திய மூவர்ணக் கொடி - வைரலாகும் வீடியோ!
பெல்ஜியம்: திரையுலகைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், தற்போது சர்வதேச கார் பந்தய களத்தில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பெல்ஜியம்: திரையுலகைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், தற்போது சர்வதேச கார் பந்தய களத்தில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற 'சர்க்யூட் டி ஸ்பா-பிராங்கோசாம்ப்ஸ்' (Circuit de Spa-Francorchamps) ஓடுதளத்தில் நடைபெற்ற '24H Series - GT3 Pro-Am' பிரிவில், அஜித்குமாரின் 'அஜித்குமார் ரேசிங்' (AK Racing) அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து (P2) அசத்தியுள்ளது.
வெற்றி மேடையில் தனது குழுவினருடன் உற்சாகமாக நின்ற அஜித்குமார், இந்திய தேசியக் கொடியை ஏந்தி தனது தேசப்பற்றையும் பெருமையையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விடாமுயற்சியின் வெற்றி: கடந்த சில நாட்களாக இந்தப் பந்தயத்திற்காகத் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த அஜித், சவாலான இந்தத் தொடரில் மிகச் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். "ஆர்வமும், விடாமுயற்சியும் இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இதுவே சாட்சி" என அவரது ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்துப் பதிவிடுகையில், "பெருமைமிக்க மேடையில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இந்தியக் கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments
No comments yet. Be the first to comment.