TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தமிழக அரசு கஜானாவில் ஹேக்கர்கள் ஊடுருவல்: ரூ.22 கோடி அபேஸ் பின்னணியில் நைஜீரிய கும்பல்?

Share This Article:

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை கணக்குகளை ஹேக் செய்து ரூ.22.10 கோடி திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான அரசு வங்கிக் கணக்குகளிலேயே கைவரிசை காட்டிய இந்த நூதன மோசடியில், நைஜீரிய சைபர் கிரைம் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழக அரசு கஜானாவில் ஹேக்கர்கள் ஊடுருவல்: ரூ.22 கோடி அபேஸ் பின்னணியில் நைஜீரிய கும்பல்?

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலம் திருடப்பட்டுள்ளது. தனிநபர்களின் வங்கிக் கணக்குகளில் டிஜிட்டல் மோசடி நடப்பது வாடிக்கையாக இருக்கும் நிலையில், தற்போது பாதுகாப்பான அரசு கணக்குகளிலேயே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் திருடப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்டபம், நாகை மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் நிதியில் இருந்து இந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வெளியான தகவல்களின்படி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து 14 கோடி ரூபாயும், நாகை ஊராட்சி ஒன்றியத்தில் 3.10 கோடி ரூபாயும், தாம்பரம் ஊராட்சி ஒன்றியக் கணக்கில் இருந்து 5 கோடி ரூபாயும் ஹேக் செய்து திருடப்பட்டுள்ளது. குறிப்பாக, 15-வது நிதிக்குழு மானியத்தில் சுகாதார நல மையங்கள் கட்டும் திட்டத்துக்கான நிதியே இதில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Content image

இந்த மாபெரும் சைபர் தாக்குதலின் பின்னணியில் நைஜீரியாவைச் சேர்ந்த இணையவழி குற்றக் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் புதுச்சேரியில் இதேபோன்றதொரு மோசடி நடந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அதே கும்பல் ஊடுருவி கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு முதல் பண பரிவர்த்தனை வரை அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடைபெறும் நிலையில், நிதித்துறை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். ஹேக்கர்கள் எந்த ஐபி (IP) முகவரியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தினார்கள், திருடப்பட்ட 22 கோடி ரூபாய் எந்தெந்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது மற்றும் அந்தப் பணத்தை முடக்கி உடனடியாக மீட்க முடியுமா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions