TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் மெகா ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share This Article:

தமிழக நூலகங்களுக்கு AI மூலம் எழுதப்பட்ட போலி புத்தகங்களை விநியோகம் செய்த முறைகேடு வழக்கில், உடனடியாக FIR பதிவு செய்து 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் மெகா ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறிப்பாக, கோவை பெரியார் அறிவுலகம் மற்றும் பல நூலகங்களில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கற்பனையான பெயர்களில் எழுதப்பட்ட ஏராளமான போலி புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த மோசடியை எழுத்தாளர்கள் தரப்பில் சுட்டிக்காட்டியதை அடுத்து, இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மிகக் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர்கள், உடனடியாக FIR பதிவு செய்ய உத்தரவிட்டனர். மேலும், முறைகேட்டில் அதிக அளவில் தொடர்புடையதாகக் கூறப்படும் 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

Content image

எந்த அரசையும் குறை கூற விரும்பவில்லை என்றும், இதற்கு முழு காரணமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள்தான் என்றும் நீதிபதிகள் வெளிப்படையாகவே சாடினர். முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே அவர்கள் திருந்துவார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் புத்தகக் கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் முழுப் பட்டியலையும் நாளைக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர்.

புத்தகங்கள் வாங்க யார் யார் கையெழுத்துப் போட்டார்கள், அதற்கான பணம் எப்படிப் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்த விரிவான அறிக்கையை அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதனை எந்த வகையிலும் அரசியல் ஆக்காமல் நேர்மையான முறையில் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions