TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நடிகை பிரியா பவானி சங்கருக்கு திருமண நிச்சயமா? நீண்ட நாள் காதலருடன் விரைவில் திருமணமா?

Share This Article:

நடிகை பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலர் ராஜ்வேல் ராஜுடன் இணைந்து பகிர்ந்த தீபாவளி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவருக்கும் திருமண நிச்சயம் நடைபெற்றுவிட்டதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கருக்கு திருமண நிச்சயமா? நீண்ட நாள் காதலருடன் விரைவில் திருமணமா?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. நீண்ட காலமாக காதலித்து வரும் ராஜவேல் ராஜ் என்பவருடன் அவருக்குத் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.பிரியா பவானி சங்கர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாகவும் பணியாற்றியுள்ளார்.

முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

தனது இயல்பான நடிப்பாலும், கதாபாத்திரத் தேர்வுகளாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.

Content image

''பிரியா பவானி'' சங்கரும் 'ராஜ்வேல் ராஜும்'கல்லூரி காலத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிந்தவர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சினிமா துறையில் பிஸியாக இருந்தாலும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இருவரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு கடற்கரையை ஒட்டிய பகுதியில் தங்களது கனவு வீட்டை இருவரும் இணைந்து வாங்கினர்.

அப்போது அவர்களுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வதந்திகள் பரவின. இதற்கு விளக்கமளித்த பிரியா பவானி சங்கர், அது திருமணம் அல்ல, தங்களது புதிய வீட்டின் புதுமனை புகுவிழா மட்டுமே என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 2026 தீபாவளியை முன்னிட்டு பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலர் ராஜ்வேல் ராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களில் இருவரும் பாரம்பரிய உடையில் மல்லிகைப்பூ மாலை அணிந்தபடி காணப்படுகின்றனர். மேலும், பிரியாவின் கைகளில் மருதாணி அலங்காரமும் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, இந்தப் புகைப்படங்களுடன் திருமணப் பாடலையும் இணைத்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமண நிச்சயம் நடைபெற்றிருக்கலாம் என்றும், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions