TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

பிருத்விராஜ் – மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய ஹாரர் படம் 'ஓடியன்' படப்பிடிப்பு நிறை

Share This Article:

பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர் நடிப்பில் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கும் 'ஒடியன் – ஏஜ் ஆஃப் இல்லுஷன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது

பிருத்விராஜ் – மஞ்சு வாரியர் நடிக்கும் புதிய ஹாரர் படம் 'ஓடியன்' படப்பிடிப்பு நிறை

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் புதிய ஹாரர் திரைப்படமான 'ஓடியன் ஏஜ் ஆஃப் இல்லுஷன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

'ஓடியன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பூதகாலம், பிரம்மயுகம், டயஸ் ஐரே உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராகுல் சதாசிவன். இவர் தற்போது பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'ஓடியன் ஏஜ் ஆஃப் இல்லுஷன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் பிருத்விராஜ் – மஞ்சு வாரியர்

இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'ஓடியன்' என்ற பெயரில் மோகன்லால், மஞ்சு வாரியர் இணைந்து நடித்த திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது அதே பெயரில் புதிய ஹாரர் திரைப்படம் உருவாகி வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Content image

இரண்டு மாதங்களில் நிறைவடைந்த படப்பிடிப்பு

கேரளாவின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராண நம்பிக்கைகளில் இடம்பெறும் ஒடியன் என்ற மர்மமான கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற பூஜையுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற படப்பிடிப்பு சுமார் இரண்டு மாதங்களில் நிறைவடைந்துள்ளது.

இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு சுமார் 10 நாட்களும், மஞ்சு வாரியருக்கு 15 நாட்களும் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்திருப்பது திரையுலகினர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மீண்டும் ஹாரர் கதைக்களத்தில் ராகுல் சதாசிவன்

'ரெட் ரெயின்', 'பூதகாலம்', 'பிரம்மயுகம்', 'டீயஸ் ஈரே' உள்ளிட்ட படங்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் ராகுல் சதாசிவன். குறிப்பாக வித்தியாசமான கதை சொல்லல், மர்மமான காட்சிகள் மற்றும் திகிலூட்டும் திரைக்கதை அமைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அந்த வகையில், தற்போது அவர் இயக்கும் 'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்லுஷன்' திரைப்படமும் ஹாரர் மற்றும் சூப்பர்நேச்சுரல் திரில்லர் பாணியில் உருவாகி வருகிறது. கேரள நாட்டுப்புறக் கதைகளில் இடம்பெறும் ஒடியன் கதாபாத்திரத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒடியன் என்பது நாட்டுப்புற நம்பிக்கைகளின்படி வெவ்வேறு உருவங்களை எடுக்கக்கூடிய மர்மமான சக்திகளைக் கொண்ட கதாபாத்திரமாகக் கருதப்படுகிறது. உருவமாற்றம் மற்றும் மாயத் தோற்றங்கள் போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், படத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Content image

மோகன்லாலின் 'ஒடியன்' படத்துடன் ஒப்பிடும் ரசிகர்கள்

ஏற்கனவே 2018ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் 'ஒடியன்' என்ற திரைப்படம் வெளியானது. வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் இயக்கிய அந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் அதே பெயரில் புதிய திரைப்படம் உருவாகி வருவது மலையாள ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், 'லோகா: சாப்டர் 1 – சந்திரா' திரைப்படத்திலும் துல்கர் சல்மான் ஒடியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், பிருத்விராஜ் ஒடியனாக நடிக்கும் புதிய திரைப்படம் எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் எடிட்டிங், பின்னணி இசை மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற உள்ளன. படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions