TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

அமைச்சராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: புலிகள் காப்பக விதிமீறலில் வன்னியரசு மீது கர்நாடக அரசு விசாரணை!

Share This Article:

முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகப் பகுதிகளில் வனவிலங்குகளை நெருங்கிச் சென்றதாக எழுந்த புகாரில், தமிழக அமைச்சர் வன்னியரசு மீது விசாரணை நடத்த கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்: புலிகள் காப்பக விதிமீறலில் வன்னியரசு மீது கர்நாடக அரசு விசாரணை!

தமிழக சமூக நீதித்துறை அமைச்சரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான வன்னியரசு, கடந்த நவம்பர் 10-ம் தேதி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குச் சென்றிருந்தார். அங்கிருந்து கர்நாடக எல்லையையொட்டிய பந்திப்பூர் புலிகள் காப்பகப் பகுதிக்குச் சென்ற அவர், காட்டு யானைக்கு மிக அருகில் நின்றபடியும், புலியை வாகனத்தில் பின்தொடர்வது போன்றும் எடுத்த வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ஒரு அமைச்சரே விதிகளை மீறியதாகக் கூறி சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சஃபாரி வாகனங்களில் ஒன்றில் கர்நாடகப் பதிவெண் தெளிவாகத் தெரிந்ததை அடுத்து, விவகாரம் இப்போது கர்நாடக அரசின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சமூக ஊடகக் குழுவினர் மூலம் இந்த வீடியோ தனது பார்வைக்கு வந்ததாகத் தெரிவித்தார். வீடியோவில் வாகனத்தின் பதிவெண் உள்ளிட்ட ஆதாரங்கள் தெளிவாக உள்ளதால், இதில் வனவிலங்கு பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்துள்ளதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Content image

இந்தச் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக வனப்பாதுகாப்பு முதன்மைச் செயலர் மற்றும் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) ஆகியோருக்குக் கடிதம் எழுதவுள்ளதாக ராமலிங்க ரெட்டி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "ஒருவர் எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானவை; விதிகளை மீறி யாரும் செயல்பட முடியாது" என்று அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார்.

மறுபுறம், தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள அமைச்சர் வன்னியரசு, தான் முறையான அனுமதி பெற்றே வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறியுள்ளார். புலியை நேரில் பார்த்த ஆர்வ மிகுதியால் அதனை அருகில் இருந்து பார்க்க முயன்றேனே தவிர, எந்த விலங்கையும் விரட்டவோ துன்புறுத்தவோ இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழக அரசு இதுவரை இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடாத நிலையில், கர்நாடக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions