TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நூலக புத்தக கொள்முதல் மோசடி: மேலும் 2 பதிப்பகங்கள் சிக்கின – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி தகவல்!

Share This Article:

தமிழக நூலகங்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை கொள்முதல் செய்ததில் கடந்த 3 ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் சிக்மா மற்றும் வித்யா ஆகிய மேலும் இரு பதிப்பகங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

நூலக புத்தக கொள்முதல் மோசடி: மேலும் 2 பதிப்பகங்கள் சிக்கின – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி தகவல்!

தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முறைகேடுகள் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவை பெரியார் அறிவுலகத்திற்கு 'அகல் விளக்கு' மற்றும் 'ஃபீனிக்ஸ்' ஆகிய பதிப்பகங்களில் இருந்து ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக சட்டப்பிரிவு இணைச் செயலாளர் இ.பரந்தாமன் மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து கடந்த 7-ஆம் தேதி அளித்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், முறைகேடு தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பல அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும், கைதான அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனைக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மோசடியில் 'சிக்மா' மற்றும் 'வித்யா' ஆகிய இரண்டு பதிப்பகங்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அகல் விளக்கு பதிப்பகத்திற்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Content image

கோவை பெரியார் அறிவுலகம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நூலகங்களிலும் இதேபோன்று புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. தற்போது அந்தப் புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வகுத்துக் கொடுத்த கொள்முதல் கொள்கையை அதிகாரிகள் முறையாகப் பின்பற்றியிருந்தால், இந்த முறைகேட்டை முன்கூட்டியே தவிர்த்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வந்தால், அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் நகலைத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions