TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்... மீண்டும் திரைக்கு வரும் ‘அண்ணாமலை’ படம்!

Share This Article:

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு 1992-ல் வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படம் 4K மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வந்தது.

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்... மீண்டும் திரைக்கு வரும் ‘அண்ணாமலை’ படம்!

''சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்'' பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 11 அல்லது 12-ம் தேதி அவரது நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அவரது பழைய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டாலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 1992-ம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாமலை’. இப்படத்தில் குஷ்பு, சரத்பாபு, மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Content image

4K தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்ணாமலை’ திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 4K தரத்தில் காட்சிகள் மேம்படுத்தப்பட்டு, டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஒலித்தொழில்நுட்பத்துடன் இப்படம் மீண்டும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு இந்த மறுவெளியீடு சிறப்பு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 12-ல் வெளியீடா?

ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 டிசம்பர் 12-ம் தேதி ‘அண்ணாமலை’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் மறுவெளியீடு ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் திரையில் ரசிக்கும் வாய்ப்பை வழங்கியது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions