தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான 'விஜய் சேதுபதி', சமீபத்திய பேட்டி ஒன்றில் 'முதலமைச்சர் விஜய்யின்' அரசியல் பயணம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
'எம்மி விருது வழங்கிய முதல் தமிழ் நடிகர்'.
நியூயார்க்கில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் விருது வழங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெற்றுள்ளார்.
விஜய் சேதுபதியின் படங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'டிரெயின்' திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் கதை முழுவதும் ரயிலில் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள 'இஞ்சி வெல்லம்' திரைப்படம் ஜனவரி 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாக்கெட் நாவல்' திரைப்படமும் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஜய் ஆட்சி குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில்
இந்நிலையில், திரைப்படத்திற்கான நேர்காணலில் கலந்துகொண்ட விஜய் சேதுபதியிடம், முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளீர்கள். அவருடைய ஆட்சி எப்படி இருக்கிறது? உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், விஜய் சாருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால், அரசியல் என்பது அவர்கள் போடும் திட்டங்கள் மற்றும் அதைச் செயல்படுத்தும் விதம் தொடர்பானது. அதைக் கூர்ந்து கவனிப்பது என்னுடைய வேலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலுக்கு வருவது என்பது ஆசையல்ல, அது ஒரு சேவை என்றும், தாங்கள் நடத்தும் அமைப்பின் மூலம் இதுவரை 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, குளங்களைத் தூர்வாருவது, பலருக்குக் கல்வி உதவி செய்வது உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
விமர்சனம் குறித்த விஜய் சேதுபதியின் பார்வை
விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், விமர்சனங்கள் நம்மை மேலும் வலிமையானவர்களாக மாற்றுகின்றன. சில விமர்சனங்கள் ஆரோக்கியமானதாகவும், சில தேவையற்றதாகவும் இருக்கும்.
நாம் என்ன செய்தாலும் பாராட்டுகிறார்கள் என்றால் அது நல்லதல்ல. விமர்சனங்கள் இருப்பதுதான் வளர்ச்சிக்கு உதவும். விமர்சனங்கள் இருந்தால்தான் நாம் அனைவரின் பார்வையிலும் இருக்கிறோம் என்று அர்த்தம். இல்லையென்றால் கூட்டத்தில் கரைந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தலைமைத்துவம் குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, பிரச்சினைகளும் பொறுப்புகளும் வரும்போது எதிரணியினர் மீது பழியைப் போட்டுவிட்டு 'ஓடுவது தலைமைக்கான தகுதி இல்லை'. அதற்கு பெயர் ஏமாற்று வேலை என்று கூறியிருந்தார்.
இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அளித்துள்ள அரசியல் தொடர்பான பதில்களும் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

0 Comments
No comments yet. Be the first to comment.