TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை – ரூ.207 கோடி மதிப்பில் தமிழக தொழிலதிபர் வழங்கிய பிரம்மாண்ட பரிசு!

Share This Article:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் தனது மனைவியுடன் இணைந்து 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். சுமார் ரூ.207 கோடி மதிப்பிலான இந்த காணிக்கை, தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய காணிக்கைகளில் ஒன்றாக கவனம் பெற்றுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை – ரூ.207 கோடி மதிப்பில் தமிழக தொழிலதிபர் வழங்கிய பிரம்மாண்ட பரிசு!

திருப்பதி ஏழுமலையானுக்கு பிரம்மாண்ட காணிக்கை!

ஆந்திர மாநிலம் திருமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதனால் திருப்பதி தேவஸ்தானம் நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் கோவில் நிர்வாகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளார். இந்த தங்க நகைகளின் மதிப்பு செய்கூலி உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சுமார் ரூ.207 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய அளவில் தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

45 வகையான பிரத்யேக தங்க ஆபரணங்கள்!

தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் வழங்கியுள்ள இந்த தங்க நகைகள் மொத்தம் 9 தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 45 வகையான பிரத்யேக ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. ஏழுமலையானின் உச்சி முதல் பாதம் வரை அலங்கரிக்கும் வகையில் இந்த நகைகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய வடிவமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆபரணங்கள் அனைத்தும் பெட்டிகளில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தனிநபர் ஒருவர் ஏழுமலையானுக்கு வழங்கிய மிகப்பெரிய காணிக்கையாக இது இருக்கும் என தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Content image

யார் இந்த வர்த்தமான் ஜெயின்?

இவ்வளவு பெரிய அளவில் தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ள வர்த்தமான் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு தனது முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு தகவல் தொழில்நுட்பத் துறையில் சொந்தமாக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தொழிலில் படிப்படியாக முன்னேறியுள்ளார். தொடர்ந்து தனது கடின உழைப்பின் மூலம் வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்துள்ளார். பின்னர் தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.6,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாக கூறப்படுகிறது.

வேண்டுதலை நிறைவேற்றிய தொழிலதிபர்!

தொழிலில் கிடைத்த வெற்றிக்குப் பிறகு தனது செல்வத்தின் ஒரு பகுதியை சமூக நலப்பணிகளுக்காக செலவிடவும், ஏழுமலையானிடம் தான் செய்துகொண்ட வேண்டுதலை நிறைவேற்றவும் வர்த்தமான் ஜெயின் முடிவு செய்துள்ளார். அதன்படி, தனது மனைவி ராதிகா ஜெயினுடன் இணைந்து 121 கிலோ எடையிலான தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அவர் அறிவித்தபடி, இந்த தங்க நகைகள் நவம்பர் 26-ம் தேதி திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டன. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், கோவில் அதிகாரிகளிடம் இந்த ஆபரணங்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது தங்க நகைகளை பார்வையிட்ட முதலமைச்சர், அவற்றின் பிரம்மாண்டத்தையும் பிரத்யேக வடிவமைப்பையும் கவனித்தார்.

தொழிலதிபர் தம்பதிக்கு சந்திரபாபு நாயுடு பாராட்டு!

இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா ஜெயின் ஆகியோரின் தாராள மனப்பான்மையைப் பாராட்டினார்.

மேலும், பக்தர்களில் பலர் கோடீஸ்வரர்களாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் இருந்தாலும், இதுபோன்ற பிரம்மாண்டமான மற்றும் தனித்துவமான காணிக்கையை இதுவரை யாரும் வழங்க முன்வந்ததில்லை என்று குறிப்பிட்டார்.

மக்கள் தங்களது செல்வத்தில் ஒரு பகுதியை ஆன்மிகப் பணிகளுக்கும், மனிதாபிமான அறப்பணிகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்கும் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய சேவைகளின் மூலமாகவே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

தொழிலில் கிடைத்த வெற்றியை இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாற்றியுள்ள தமிழக தொழிலதிபரின் இந்த காணிக்கை தற்போது ஆன்மிக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions