TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா? – மு.க.ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

Share This Article:

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதி பிரதிநிதித்துவத்தில் எந்தவித சமரசமும் கிடையாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 7.18 சதவீத பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி விகிதாச்சாரத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா? – மு.க.ஸ்டாலின் அதிரடி விளக்கம்!

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கான மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கை தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆதரவு அளிக்கப்போகிறதா?

இந்தச் சூழலில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மசோதாவில் உரிய உத்தரவாதம் வழங்கப்பட்டால் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கலாம் என திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் திமுக தனது நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டு வருகிறதா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் அதிகரித்தது.

மேலும், திமுக பாஜகவுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறதா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியும் திமுகவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்து கேள்விகளை முன்வைத்தது. இதற்கிடையே காங்கிரஸ் தரப்பிலிருந்தும் திமுகவின் அணுகுமுறை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன.

ஸ்டாலின் வெளியிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகள்!

இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதி பிரதிநிதித்துவத்தை எந்தச் சூழலிலும் குறைக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதலாவதாக மக்களவையில் தற்போது தமிழகத்திற்கு உள்ள 7.18 சதவீத பிரதிநிதித்துவம், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் குறைக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இரண்டாவதாக, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தற்போது நடைமுறையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுமா?

தொகுதி மறுவரையறை நடவடிக்கையில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

குறிப்பாக, வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், புதிய தொகுதி மறுவரையறையின்போது அந்த மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் அரசியல் செல்வாக்கு குறையக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

இதற்கு மாறாக, அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே சதவீதத்தில் அதிகரிக்கும் வகையில் 50 சதவீத உயர்வு என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வெறும் வாய்மொழி உத்தரவாதம் மட்டும் போதாது என்றும், தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் அம்சங்கள் சட்டத்திலேயே இடம்பெற வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது.

சமரசத்திற்கு இடமில்லை – ஸ்டாலின் திட்டவட்டம்!

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பியது திமுகதான் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊடகங்களில் பரப்பப்படும் யூகங்களோ, அரசியல் எதிரிகளின் விமர்சனங்களோ திமுகவின் உறுதியான நிலைப்பாட்டை மாற்றிவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமைகளிலும், கட்சியின் கொள்கைகளிலும் எந்தவித சமரசமும் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனால் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்குமா அல்லது மசோதாவின் இறுதி வடிவத்தைப் பார்த்த பிறகே முடிவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions