TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

திருப்பரங்குன்றம் வந்த CRPF வீரர்களுக்கு மலர் தூவி வரவேற்பு! இந்து அமைப்பினர் உற்சாகம்

Share This Article:

திருப்பரங்குன்றம் மலை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வந்த CRPF வீரர்களை இந்து அமைப்பினர் மலர் தூவி வரவேற்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன.

திருப்பரங்குன்றம் வந்த CRPF வீரர்களுக்கு மலர் தூவி வரவேற்பு! இந்து அமைப்பினர் உற்சாகம்

CRPF வீரர்களுக்கு மலர் தூவி வரவேற்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைப்பகுதியின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்த மத்திய ரிசர்வ் காவல் படையினரை (CRPF) இந்து அமைப்பினர் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

மலைப்பகுதிக்கு CRPF வீரர்கள் சென்றபோது, அவர்களுக்கு மலர்களைத் தூவியும் மேளதாளங்கள் முழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மலைப்பகுதியில் பாதுகாப்புப் பணிகள் மத்திய படையினரின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்த வரவேற்பு நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதற்குப் பதிலாக வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாதது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 28-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது. மேலும், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் CRPF கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

பக்தர்களுக்கு அனுமதி; பாதுகாப்பு சோதனை தீவிரம்

இதனைத் தொடர்ந்து மலைப்பகுதிக்கு வரும் பக்தர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் செல்போன் எண்களை அளித்த பிறகு பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்டு மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கும் வழிபாடு மேற்கொள்ளத் தடையில்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் மற்றும் தர்கா ஆகிய இரு வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தீபம் ஏற்றும் நேரம் மற்றும் அதற்கான நடைமுறைகளை ஒருங்கிணைக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. CRPF வீரர்களை இந்து அமைப்பினர் மலர் தூவி வரவேற்ற நிகழ்வு, தற்போதைய தீப விவகாரத்தில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions