TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி: 2-ம் கட்ட பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!

Share This Article:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ம் கட்ட பொதுத்தேர்வு மே 15 முதல் மே 21 வரை நடைபெற உள்ளது. மதிப்பெண்களை உயர்த்த விரும்புவோருக்கான முக்கிய விதிகளை வாரியம் வெளியிட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி: 2-ம் கட்ட பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு - முழு விவரம் இதோ!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி தேர்வுகள் மே 15, 2026 அன்று தொடங்கி மே 21, 2026 அன்று நிறைவடையும்.

  • மே 15: கணிதம் (Standard & Basic)
  • மே 16: ஆங்கிலம்
  • மே 18: அறிவியல்
  • மே 19: தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள்
  • மே 20: தகவல் தொழில்நுட்பம் (IT), சமஸ்கிருதம்
  • மே 21: சமூக அறிவியல்


புதிய கல்விக்கொள்கையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முறையில், முதல் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களின் மதிப்பெண்களை உயர்த்துவதற்காக இந்த இரண்டாம் கட்டத் தேர்வை எழுதலாம். மாணவர்கள் அதிகபட்சமாக 3 பாடங்களில் மட்டுமே மதிப்பெண்களை உயர்த்த (Improvement) தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.


முதல் கட்ட பொதுத்தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்த (Compartment) மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். ஆனால், முதல் கட்டத் தேர்விலேயே ஒட்டுமொத்தமாகத் தோல்வி அடைந்தவர்கள் அல்லது அதிக பாடங்களில் தோல்வி கண்டவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வை எழுத தகுதி பெற மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தேர்வின் சிறப்பம்சமே 'பெஸ்ட் ஆஃப் டூ' முறைதான். ஒரு மாணவர் முதல் தேர்விலும், இரண்டாம் தேர்விலும் பங்கேற்றால், இரண்டில் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ, அதுவே இறுதி முடிவாக எடுத்துக் கொள்ளப்படும். இதனால் மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions