TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நாளை உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம்: 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?

Share This Article:

திருச்சூர்: கேரளா என்றாலே நினைவுக்கு வரும் பிரம்மாண்ட திருவிழாவான 'திருச்சூர் பூரம்' நாளை (ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது. 1798-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழாவிற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தொடக்கம் உள்ளது.

நாளை உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம்: 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?

நாளை உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம்: 200 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?

திருச்சூர்: கேரளா என்றாலே நினைவுக்கு வரும் பிரம்மாண்ட திருவிழாவான 'திருச்சூர் பூரம்' நாளை (ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது. 1798-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விழாவிற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுத் தொடக்கம் உள்ளது.

திருச்சூர் பூரம் - உருவான கதை: 1798-ம் ஆண்டுக்கு முன்பு வரை, திருச்சூர் பகுதியைச் சுற்றியுள்ள கோயில்கள் ஆராட்டுப்புழா பூரம் (Aarattupuzha Pooram) விழாவில்தான் கலந்துகொள்வது வழக்கம். ஒருமுறை கடும் மழை காரணமாக திருச்சூரைச் சேர்ந்த சில கோயில் குழுவினர் குறித்த நேரத்திற்குள் ஆராட்டுப்புழா விழாவிற்குச் செல்ல முடியாமல் போனது.

தாமதமாக வந்த காரணத்தைக் கூறி, அவர்களுக்கு அந்த விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மக்கள், அன்றைய கொச்சி மகாராஜாவான சக்தன் தம்புரானிடம் (Sakthan Thampuran) தங்களின் குறைகளைக் கூறினர்.

உடனே சக்தன் தம்புரான், "யாரும் அனுமதி மறுக்க முடியாத அளவிற்கு, உலகமே வியந்து பார்க்கும் ஒரு விழாவை நாம் நடத்துவோம்" என அறிவித்தார். திருச்சூர் வடக்குநாதன் கோயிலை மையமாக வைத்து, 10 கோயில்களை ஒருங்கிணைத்து அவர் தொடங்கி வைத்ததுதான் இன்றைய திருச்சூர் பூரம்.

நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்:

  • குடைமாற்றம் (Kudamattom): வடுகநாதன் கோயில் முன்பு வரிசையாக நிற்கும் யானைகள் மீது விதவிதமான வண்ணக் குடைகளை மாற்றும் கண்கொள்ளாக் காட்சி.
  • மேளம்: புகழ்பெற்ற இளஞ்சிதாரா மேளம் (Ilanjithara Melam).
  • வாணவேடிக்கை: விண்ணைப் பிளக்கும் பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்வுகள்.


0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions