TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கீர்த்தி பாண்டியனை ஏமாற்றினாரா அசோக் செல்வன்? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ - பின்னணி என்ன?

Share This Article:

பொது நிகழ்ச்சி ஒன்றில் கணவர் அசோக் செல்வன் தன்னை அணைக்க வருகிறார் என நினைத்து கைகளை விரித்த கீர்த்தி பாண்டியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி பாண்டியனை ஏமாற்றினாரா அசோக் செல்வன்? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ - பின்னணி என்ன?

தமிழ் சினிமாவின் 'மேட் ஃபார் ஈச் அதர்' ஜோடிகளாக வலம் வருபவர்கள் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன். 'ப்ளூ ஸ்டார்' படத்தில் இணைந்து நடித்தபோது மலர்ந்த இவர்களது காதல், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. திரையிலும் நிஜ வாழ்விலும் ரசிக்கப்படும் இந்த ஜோடியின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.

Content image

என்ன நடந்தது? சங்கடப்பட்ட கீர்த்தி!

சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் அசோக் செல்வனும், கீர்த்தியும் கலந்துகொண்டனர். அப்போது அசோக் செல்வன் தான் நின்ற இடத்திலிருந்து நகர்ந்தபோது, அவர் தன்னை அணைக்க (Hug) வருகிறார் என்று கீர்த்தி தவறாகப் புரிந்து கொண்டார். உடனடியாக அன்புடன் கைகளை விரித்து அவரை அணைக்கத் தயாரானார் கீர்த்தி.


ஆனால், அசோக் செல்வன் அங்கிருந்து நகர முயற்சித்தாரே தவிர, அணைக்க வரவில்லை. ஒரு நொடி சங்கடமான கீர்த்தி, பின் சுதாரித்துக் கொண்டு சிரித்தபடியே அதனைச் சமாளித்தார். அசோக் செல்வனும் அந்தத் தருணத்தைச் சிரிப்பால் கடந்து சென்றார்.

Content image

ரசிகர்களின் ரியாக்ஷன்

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், "பாவம் கீர்த்தி, ஆசையாக கைகளை விரித்தவருக்கு இப்படி ஒரு ஏமாற்றமா?" என்று ஜாலியாகவும், வருத்தமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். "இது போன்ற சின்னச் சின்னத் தர்மசங்கடங்கள் எல்லா தம்பதிகளுக்கும் நடப்பதுதான், ஆனால் இவர்கள் இருவரும் அதைச் சமாளித்த விதம் அழகு" எனப் பாராட்டி வருகின்றனர்.


திரைப்பயணம் மற்றும் வதந்திகள்

தற்போது அசோக் செல்வன் 'தக் லைஃப்' உள்ளிட்ட முக்கிய படங்களில் பிஸியாக இருக்கிறார். கீர்த்தி பாண்டியனும் தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னதாக, இவர்களது திருமண வாழ்க்கை குறித்து அநாகரீகமாகக் கேள்வி எழுப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு, கீர்த்தி பாண்டியன் கொடுத்த அதிரடி பதிலடி சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions