வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க அறிவுறுத்திய நிலையில், 7 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!
நாட்டு மக்கள் ஓராண்டுக்கு வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு 7 நாள்கள் அரசுமுறைப் பயணமாகச் செல்ல உள்ளார்.
மக்கள் ஓராண்டுக்கு வெளிநாடுகள் செல்வதைக் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது அவர் 7 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்ற செய்தி பேசுபொருளாகியுள்ளது.
வரும் மே 15-ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கும் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்வீடன், நெதர்லாந்து, நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த நாடுகளில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் மற்றும் சந்திப்புகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
தேச நலன் கருதி பொதுமக்கள் அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை ஓராண்டுக்குத் தவிர்க்க வேண்டும் என சமீபத்தில் பிரதமரின் அறிவுறுத்தலாகச் செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில், பிரதமர் அடுத்தடுத்து 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், பிரதமரின் இந்த 7 நாள் பயணம் பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான மிக முக்கிய அரசுமுறைப் பயணமாகவே அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.