TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

"திமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாகச் செயல்படும்" - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் முதல் உரை!

Share This Article:

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, திமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படும் என உறுதியளித்துள்ளார்.

"திமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாகச் செயல்படும்" - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் முதல் உரை!

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின், அவையில் தனது முதல் உரையை இன்று ஆற்றினார். அப்போது அவர், ஆளுங்கட்சிக்கு திமுக ஒருபோதும் எதிரிக்கட்சியாக இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவே செயல்படும் எனத் தெரிவித்தார்.


சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை வாழ்த்திப் பேசிய உதயநிதி, அவரை "சிரித்த முகத்திற்குச் சொந்தக்காரர்" என்று புகழ்ந்துரைத்தார். மேலும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எனப் பாரபட்சம் காட்டாமல், சபையில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து பேசிய அவர், "சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இதுவே எனது முதல் உரையாகும். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, சட்டமன்றத்தில் திமுக எதிரிக்கட்சியாகச் செயல்படாது; ஜனநாயக முறையில் ஒரு சிறந்த எதிர்க்கட்சியாகவே தனது கடமையைச் செய்யும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions