பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாகக் குறைப்பு: எரிபொருள் சிக்கனத்திற்காக மோடி அதிரடி உத்தரவு!
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க சிறப்பு பாதுகாப்புப் படைக்கு (SPG) பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, அதனைத் தனது பாதுகாப்பிலிருந்தே தொடங்க அதிரடி முடிவெடுத்துள்ளார். தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் பாதுகாப்பு என்பது 'புளூ புக்' (Blue Book) எனப்படும் மிக முக்கியமான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் வருகிறது. அந்த விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யாமல், பாதுகாப்புத் தேவைக்குக் கூடுதலாக உள்ள தேவையற்ற வாகனங்களை மட்டும் நீக்க வேண்டும் எனப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
தேச நலன் கருதி எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தனது சொந்தப் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையையே குறைத்து அவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் பொது வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

0 Comments
No comments yet. Be the first to comment.