எதுக்கு அவகாசம்? கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கேள்வி!
மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்க காலதாமதம் செய்வது ஏன் என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்திற்கு எதற்கு கூடுதல் அவகாசம் தேவை என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மே மாதத்திற்கான உரிமைத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15ம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ணப் போறீங்க?" என மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே சுமூகமாக நடைபெற்று வரும் ஒரு மக்கள் நலத் திட்டத்தில், தற்போது 'மறுசீரமைப்பு' என்ற பெயரில் காலதாமதம் செய்வதன் நோக்கம் என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 15-ம் தேதிக்குள் தொகையை வரவு வைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
.

0 Comments
No comments yet. Be the first to comment.