TBC News
பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சினிமா இல்லையென்றால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்: நடிகை மிர்னாலினி ரவி ஓட்டன் டாக்!

Share This Article:

டிக் டாக், டப் ஸ்மாஷ் மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்த நடிகை மிர்னாலினி ரவி, சினிமாவுக்கு வரவில்லை என்றால் தான் என்ன செய்திருப்பேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

சினிமா இல்லையென்றால் அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்: நடிகை மிர்னாலினி ரவி ஓட்டன் டாக்!

டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் ஒட்டுமொத்த சமூக வலைதள ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை மிர்னாலினி ரவி. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால், 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கோப்ரா, எனிமி, ரோமியோ என பல முக்கியத் திரைப்படங்களில் நடித்து கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது திரைப்பயணம் மற்றும் சினிமாவுக்கு வரவில்லை என்றால் என்னவாகியிருப்பேன் என்பது குறித்து பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

Content image

விளையாட்டாகத் தொடங்கி வினையான அதிர்ஷ்டம்!

தன் சினிமா எண்ட்ரி குறித்துப் பேசிய மிர்னாலினி, ஆரம்பத்தில் தான் பட வாய்ப்புகளுக்காக வீடியோக்களை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

"நான் விளையாட்டாக செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை ஈர்த்து, எனக்கான சினிமா வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. ஆனால், பட வாய்ப்புகளுக்காக நான் அதை செய்யவில்லை. என் அதிர்ஷ்டம் தான் என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்தது. முதலில் என்னை அனுப்ப தயங்கிய என் பெற்றோர்கள், எப்படியாவது நல்ல பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கையில் தான் அனுப்பி வைத்தார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Content image

விமர்சனங்களும்... கதாபாத்திரத் தேர்வுகளும்!

ஆரம்பக் காலத்தில் தனக்கு பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்கள் வரவில்லை என்று கூறும் மிர்னாலினி, நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்தும் தனது வெளிப்படையான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.


சினிமா இல்லைனா என்ன செஞ்சிருப்பேன்?

தொடர்ந்து பேசிய அவர், "என்னை பொறுத்தவரை எனக்கு மனதில் சரி என்று பட்டதை தைரியமாக செய்துவிடுவேன். ஒருவேளை எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்காமல், நான் சினிமாவுக்குள் வராமல் இருந்திருந்தால், இந்நேரம் எம்.எஸ். (M.S.) படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பேன்" என்று தனது மாற்றுத் திட்டம் குறித்தும் கலகலப்பாகப் பேசியுள்ளார்.

எதற்கும் கவலைப்படாத குணம் கொண்ட மிர்னாலினி ரவியின் இந்த எதார்த்தமான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions