கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலாவின் தாயார்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி இளம் நடிகை ஸ்ரீலீலா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் திலக் வர்மா ஆகிய இருவர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த காதல் வதந்திகளுக்கு ஸ்ரீலீலாவின் தாயார் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீலீலா. இவரையும், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனான திலக் வர்மாவையும் இணைத்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் உலா வரத் தொடங்கின. இருவரும் காதலித்து வருவதாகவும், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் பரவிய இந்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலாவின் தாயார்
பொதுவாக சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களை இணைத்து வதந்திகள் பரவுவது வழக்கம் என்றாலும், இந்த விவகாரம் எல்லை மீறிச் சென்றதால் இதற்கு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த காதல் வதந்திகளுக்கு நடிகை ஸ்ரீலீலாவின் தாயார் தற்போது அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரசிகர்கள் நிம்மதி
பரப்பப்பட்ட செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும், அவை அனைத்தும் வெறும் வதந்திகளே என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஸ்ரீலீலாவின் தாயார் கொடுத்த இந்த விளக்கத்தின் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருந்த வதந்திகளுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீலீலா மற்றும் திலக் வர்மாவின் ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.

0 Comments
No comments yet. Be the first to comment.