முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு: கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது துரித நடவடிக்கை; பாலியல் வழக்குகளில் கடுமையான தண்டனை கிடைக்க உத்தரவு!
தமிழகத்தில் கடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது விரைந்து வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், குறிப்பாக பாலியல் குற்ற வழக்குகளை துரிதமாக விசாரித்து கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் காவல் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமை தாங்கினார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்துவது மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறிப்பாக, மாநிலத்தில் கடுமையான குற்றச்செயல்களில் (Heinous Crimes) ஈடுபடுவோர் மீது எவ்வித தாமதமும் இன்றி துரிதமாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய தண்டனையை நீதிமன்றம் மூலம் விரைவாகப் பெற்றுத்தர காவல்துறை தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை தெரிவித்தார். பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணைகளை மிகத் துரிதமாக நடத்தி, குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என அவர் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

0 Comments
No comments yet. Be the first to comment.