TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கரூர் விவகாரம்: முதலமைச்சர் விஜய் மீது புதிய வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் – திமுக மனு!

Share This Article:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி, முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக உச்சநீதிமன்றக் குழுவிடம் மனு அளித்துள்ளது.

கரூர் விவகாரம்: முதலமைச்சர் விஜய் மீது புதிய வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் – திமுக மனு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான அரசியல் சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகள் சாட்சிகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள திமுக, அவர் மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விரிவான புகார் மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, விசாரணையின் போக்கை பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை திசைதிருப்பும் நோக்கத்துடனும் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே முழு பொறுப்பு என்றும், இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி இருக்கக்கூடும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Content image

திமுக தனது மனுவில், தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) ஆகியோர் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில், தவெக நிர்வாகிகளின் திட்டமிடப்படாத செயல்பாடுகள் மற்றும் விதிமீறல்களே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தகைய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதே உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய், அதற்கு முரணான கருத்துகளை வெளியிட்டிருப்பது விசாரணையை பாதிக்கும் முயற்சியாக பார்க்கப்பட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் விஜயின் பேச்சு சம்பவம் தொடர்பான சாட்சிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவர் மீது சிபிஐ தனியாக புதிய முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையை தொடங்க உத்தரவிட வேண்டும் என்று திமுக கோரியுள்ளது.

Content image

இதனுடன், கரூர் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோருடன் மதியழகன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரிடமும், விசாரணையில் இடம்பெறும் சாட்சிகளை எந்தவிதத்திலும் அச்சுறுத்தவோ, தொடர்புகொள்ளவோ, விசாரணையில் தலையிடவோ மாட்டோம் என்ற உறுதிமொழியுடன் பிணைப் பத்திரம் (Bond) எழுதி வாங்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

Content image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், திமுக தற்போது தாக்கல் செய்துள்ள இந்த புதிய மனு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் மீது புதிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கைக்கு சிபிஐ மற்றும் உச்சநீதிமன்றக் குழு என்ன முடிவு எடுக்கிறது என்பது தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வழக்கின் விசாரணை முன்னேறும் நிலையில், இந்த மனுவின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அடுத்தகட்ட அரசியல் சூழ்நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions