TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C • Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சட்டசபை தேர்தலில் திமுக ரூ.197 கோடி, அதிமுக ரூ.112 கோடி செலவு!

Share This Article:

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான செலவு கணக்குகளை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளன. அதன்படி, திமுக ரூ.197.84 கோடியும், அதிமுக ரூ.112.39 கோடியும் தேர்தல் தொடர்பான செலவாக கணக்கு தாக்கல் செய்துள்ளன. தேர்தல் காலத்தில் திமுகவுக்கு நன்கொடைகள் உள்ளிட்ட வகையில் ரூ.126.27 கோடி வருவாய் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக ரூ.197 கோடி, அதிமுக ரூ.112 கோடி செலவு!

சட்டமன்ற தேர்தல்:

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றன. அதில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், இந்திய தேர்தல் கமிஷனிடம், தேர்தல் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தங்களின் தேர்தல் செலவின பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ள. அதன்படி தி.மு.க. ரூ.197 கோடியும், அ.தி.மு.க. ரூ.112 கோடியும் செலவு செய்துள்ள.

தி.மு.க. தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் கையெழுத்திட்டுளனர். தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக தி.மு.க.விடம் ரூ.365 கோடி கையிருப்பு இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் நன்கொடைகள் மூலம் ரூ.126 கோடி வசூலாகியுள்ளது.

விமானப் பயணம்:

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மொத்தமாக ரூ.197.84 கோடியை செலவிட்டுள்ளது. பத்திரிகை, டி.வி. மற்றும் சமூக வலைத்தள விளம்பரங்களுக்காக ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோரின் விமானப் பயணங்களுக்காக ரூ.5.90 கோடி செலவிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் ரூ.149.89 கோடியை தி.மு.க. செலவு செய்துள்ளது.

இதற்காக மு.க.ஸ்டாலினுக்கு ரூ.2.66 கோடியும், கமல்ஹாசனுக்கு ரூ.3.24 கோடியும் செலவிடப்பட் டுள்ளது. மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரிசினின் 'பென்' நிறுவனத்துக்கு ரூ.6.61 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்சி வேட்பாளர்கள் பலருக்கு தேர்தல் நிதியாக தலா ரூ.25 லட்சத்தை தி.மு.க. வழங்கியுள்ளது. தேர்தல் செலவுகள் போக, தி.மு.க.விடம் மீதம் ரூ.319.39 கோடி இருக்கிறது.


Content image

அ.தி.மு.க.வின் செலவு:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அக்கட்சியின் மொத்த தேர்தல் செலவுத் தொகையாக ரூ.112.39 கோடி காட்டப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பு கட்சியின் கையிருப்பாக ரூ.313 கோடி இருந்துள்ளது. தேர்தல் காலத்தில் ரூ.87.41 கோடி வரவு வந்துள்ளது.

அ.தி.மு.க.வின் மொத்த செலவான ரூ.112 கோடியில், ரூ.103 கோடி, பிரமான்யா ஸ்ட்ராட்ஜி கன்சல்டிங் நிறுவ னத்திடம் சமூக வலைத்தள மற்றும் ஊடக விளம்பரங்களுக்கு காக அ.தி.மு.க. வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில் அ.தி.மு.க.வின் வங்கிக் கணக்கில் ரூ.295 கோடி இருப்பு உள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions