TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

சீமானுக்கு பலத்த அடி! காரைக்குடியில் 4-வது இடம்.. 4 சதவீதமாக சரிந்த நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி - அதிர்ச்சியில் தம்பிகள்!

Share This Article:

234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். கட்சியின் வாக்கு சதவீதம் 4-ஆகக் குறைந்துள்ளது.

சீமானுக்கு பலத்த அடி! காரைக்குடியில் 4-வது இடம்.. 4 சதவீதமாக சரிந்த நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கி - அதிர்ச்சியில் தம்பிகள்!

தனித்துப்போட்டி எட்டாத வெற்றி!

தமிழக அரசியலில் திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக "தனித்துப் போட்டி" என்ற முழக்கத்துடன் களம் கண்டு வரும் நாம் தமிழர் கட்சிக்கு, இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய போதிலும், ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியாமல் போனது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடியில் சீமானுக்கு பின்னடைவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், தேர்தல் முடிவுகளின்படி அவர் 30,793 வாக்குகளை மட்டுமே பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். காங்கிரஸ் மற்றும் அமமுக வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாகவே சீமான் வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதியாக சரிந்த வாக்கு சதவீதம்

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 8.22% வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் இத்தேர்தலில் அக்கட்சி இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய முடிவுகளின்படி அக்கட்சியின் வாக்கு வங்கி 4% ஆகக் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 16 லட்சம் வாக்குகளை அக்கட்சி இந்த முறை இழந்துள்ளது.

Content image

விஜய்யின் வருகையும் தவெக தாக்கமும்

நாம் தமிழர் கட்சியின் இந்தச் சரிவுக்குப் பின்னால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) வரவு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் வசமிருந்த இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகள் பெருமளவில் தவெக-விற்குச் சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, சீமானின் "தமிழ் தேசிய" அரசியலை விட விஜய்யின் "புதிய அரசியல்" முழக்கம் இளைஞர்களிடம் எடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

சீமானின் ரியாக்ஷன்

தோல்வி குறித்துப் பேசிய சீமான், "இது எங்களின் தோல்வி அல்ல, மக்களின் தோல்வி. சமரசம் செய்து அதிகாரத்தைப் பிடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இது எங்களுக்கு ஒரு பாடமே தவிர முடிவு அல்ல," எனத் தனது வழக்கமான ஆக்ரோஷத்துடன் தெரிவித்துள்ளார்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions