விஜய் தமிழக முதல்வரான பின் 'ஜனநாயகன்' படத்திற்கு மவுசு: ஓடிடி உரிமையைக் கைப்பற்றப் போகும் நிறுவனம் எது?
தளபதி விஜய் முதல்வரான பிறகு, ரிலீஸில் சிக்கல் நீடித்த 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமைக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அமேசான் பிரைம் விலகிய நிலையில், புதிய ஒப்பந்தங்கள் குறித்து படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே திரைக்கு வர வேண்டியது. ஆனால், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் இணையதளத்தில் படம் லீக் ஆன விவகாரம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால், ஏற்கனவே இப்படத்தை வாங்கியிருந்த அமேசான் பிரைம் நிறுவனம் தனது ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது படக்குழுவினருக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று, தளபதி விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதன் காரணமாக, விஜய் நடித்த படங்களுக்கு மக்கள் மத்தியில் தற்பொழுது வேற லெவல் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த அரசியல் மாற்றம் 'ஜனநாயகன்' படத்தின் வணிக மதிப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
போட்டிபோடும் முன்னணி நிறுவனங்கள்
தற்போது படத்தின் ரிலீஸ் வேலைகள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், ரத்து செய்யப்பட்ட ஓடிடி உரிமையைக் கைப்பற்றப் பல முன்னணி நிறுவனங்கள் மல்லுக்கட்டி வருகின்றன.
- பழைய விலையை விட கூடுதல் தொகைக்கு ஒப்பந்தம் செய்ய பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
- தமிழக விநியோக உரிமையும் பழைய நிலையிலேயே தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் 'ஜனநாயகன்' படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments
No comments yet. Be the first to comment.