TBC News
"என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! ஹைதராபாத்தில் அதிநவீன 'சிந்து மருத்துவமனை': பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்! விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

வினாத்தாள் கசியால் நீட் தேர்வு ரத்து: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் சிறப்பு நீட் பயிற்சி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Share This Article:

வினாத்தாள் கசிவு காரணமாக அண்மையில் ரத்து செய்யப்பட்ட நீட் (NEET) தேர்விற்குப் பதிலாக, மறுதேர்வு எழுதவிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 11-ம் தேதி வரை தீவிரக் குறுகிய காலச் சிறப்புப் பயிற்சி (Crash Course) வழங்கத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வினாத்தாள் கசியால் நீட் தேர்வு ரத்து: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மே 23 முதல் சிறப்பு நீட் பயிற்சி! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

பின்னணி மற்றும் புதிய உத்தரவு:

கடந்த மே 3, 2026 அன்று நாடு முழுவதும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடைபெற்றது. எனினும், வடமாநிலங்களில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த கடுமையான புகார்களைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்தது.

மறுதேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்புப் பயிற்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:

  • பயிற்சி காலம்: வரும் மே 23, 2026 முதல் தொடங்கும் இப்பயிற்சி, ஜூன் 11, 2026 வரை தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
  • இலவசப் பயிற்சி மற்றும் தங்குமிடம்: மாவட்டந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் இந்த நேரடிப் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.
  • சிறப்பு நிபுணர்கள்: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களுக்குப் பிரத்யேகப் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்Subject Experts மூலம் தினசரி மாதிரித்தேர்வுகளுடன் கூடிய தீவிரப் பயிற்சி அளிக்கப்படும்.

தேர்வு ரத்து செய்யப்பட்டதால் சோர்வடைந்திருந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, இந்தத் திடீர் திருப்புமுனைப் பயிற்சி அவர்கள் தங்களை மீண்டும் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளப் பெரும் உதவியாக இருக்கும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions